Wednesday, December 19, 2012

35. ஒரு நாள், ஒரு நினைவு


This poem carries my reflections on the get-together of the classmates of Regional Engineering College (now called NIT), Trichy  on 30th August, 2006 at GRT Grand Days Hotel, T.Nagar, Chennai.

கூடினார் முப்பதில்* "அற்புத நாட்களின்**" அரங்கில்
நாடினார் முன்பறிந்த முகங்களின் சாயலை
வாடினார் வாராதார் முகத் தோற்றம் காணாமல்
பாடினார் பழகிய நாட்களின் பல்லவிச் சாரலை

அதிர்ந்தன "அற்புத நாட்களின்" அறைச் சுவர்கள்
முதிர்ந்த இளமை முறுக்கின் கிறுக்கு மொழிகளில்
உதிர்ந்தன காலம் எழுப்பிய இடைவெளிச் சுவர்கள்
குதிர்ந்தது காலம் பல கடந்தோர் மறுகூடல்.

ஆண்டுகள் கடந்தன முப்பத்து நான்கு - இடையில் உயிர்க்
கூண்டு துறந்து பறந்த கிளிகள் சில உண்டு - அன்று
ஈண்டு வந்திருந்தோர் தொகை முப்பத்து மூன்று - பணியின்
மீண்டு வர இயலாதார்க்கும் நம் வாழ்த்துக்கள் உண்டு

உலகுக்கு ஒளி வழங்கி உயிர்ப்பிக்கும் இரவி போல் நம்
கலவைக்கு வழி வகுத்து உழைத்திட்ட இரவிக்கும்***
தொலைக்காட்சி விளம்பரம் போல் தொடர்ந்து நினைவூட்டி
வலுவான அடைத்தளம் அமைத்திட்ட ஆடலரசருக்கும்****
மின்னஞ்சல் கடிதங்கள் மேன்மேலும் அனுப்பி வைத்து நம்
பொன்னெஞ்சங்களைக் கவர்ந்த ஹைதர் அனந்துவுக்கும்*****
இன்னும் வேராக மறைந்திருந்து உழைத்திட்ட பலருக்கும்

சொல்ல விழைந்தேன் நன்றி - ஆயின்
வல்ல சொற்கள் சிந்தையில் வாராமையால்
மெல்ல நழுவுகிறேன் சந்தடியின்றி - நான்
சொல்ல வந்ததை நல்லோர் உள்ளம் அறியும் என்று நம்பி!

முப்பதில்* - ஆகஸ்ட் 30
அற்புத நாட்களின்**  - Hotel GRT "Grand Days"
இரவிக்கும்***  - Ravi of Chennai
ஆடலரசருக்கும்****  - Natarajan (Nalli Nattu) of Chennai

ஹைதர் அனந்துவுக்கும்***** - Ananthakrishnan of Hyderabad.

Here is a rough translation for those who can’t read Tamil

Assembled thirty men in the hall of  the “Grand Days”,
Looked  for the semblances of the faces they had once known,
Pined for meeting those who didn’t turn up (and)
Sang the ode of the days they were together.

Reverberated the walls of the “Grand Days”
With the prattling talk of the middle-aged lads
Crumbled the separating walls of time (and)
Blossomed the reunion after a long interval of time!

Thirty four years have passed. And in the meanwhile
Some have passed away – Of the remaining,
Only thirty three made it – but offer do we
Our greetings to those held back by work!

The Sun (Ravi) gives  life and light to the world.
So has Ravi given a shape to this meet!
Like a TV ad that chases you on, Natarajan with his follow up
Laid the foundation for the show!

Ananthu (meaning “endless”) attracted us with his
Endless emails. And were there others working behind
Like the roots of a tree!

Eager as I am to express my gratitude to all
Yet unable to come out with words that befit
Slip out stealthily unseen by any - hoping that
Noble hearts will discern my intended message.

Written on 5th September, 2006

No comments:

Post a Comment