Thursday, December 20, 2012

திருச்சியில் ஒரு நெகிழ்ச்சி


We, the students who passed out of Regional Engineering College (now known as NIT), Trichy in 1972 had a family get-together (a Mega Meet) at Trichy on 15th and 16th December, 2012  by way of celebrating the 40th year of our graduation. This is a lyrical tribute to the Mega Meet

An English version is given below the Tamil version

சந்திப்பு பற்றிச் சிந்தித்தபோது
சிந்திய எண்ணங்களின் தொகுப்பு இது - இது
சந்தக் கவிதை இல்லை, வேறு
எந்த வகைக் கவிதையும் இல்லை - என்
சொந்த உணர்வுகளின் இயல்பான வெளிப்பாடு!
*                    *                   *                      *                       *                        *                      *
அரசியல் மாநாடுகள் அடிக்கடி நடப்பதுண்டு திருச்சியில்
அதிசயமாய் ஆங்கோர் மாநாடு உள்ளங்களின் நெகிழ்ச்சியில்
அறுபதுகள் கொண்டாடிய நாற்பதாண்டு விழா
எண்பதின்மர் கூடிய எழுச்சிப் பெருவிழா!

எப்போதோ படித்தாராம் இவ்வூர்க் கல்லூரியில்
எப்போதும் நினைத்தாராம் உடன் படித்தவரை
தப்பாமல் வந்தாராம் தத்தம் துணைவியருடன் - ஆகாயக்
கப்பல், ரயில், கார் என்று எதெதிலோ பயணித்து.

மார்கழியில் உற்சவங்கள் மாநிலமெங்கும்
பார்முழுதும் புகழ் பரந்த பாட்டுக் கச்சேரிகள்
சீர்மிகு அரங்கன் கோயில் பகல் இராப்பத்துகள்
யார் அறிவார் நாம் கொண்டாடிய உற்சாக உற்சவத்தை?

தனி மனிதராய்ச் சந்தித்துப் பிரிந்த நாம்
பணி செய்து, துணை பெற்றுப் பொருள் தேடி ஓய்ந்த பின்
பனிக்காலம் துவங்கும் டிசம்பர் மத்தியில்
அணி வகுத்தோம் இங்கே ஓர் மறு ஒளிபரப்பாய்!

விழாக்குழுவினர் செயல் திறன் போற்றிப் புகழ
எழா என் நாவில் சரியான சொற்றொடர்கள்
துழாவிப் பார்த்துக் குறை சொல்லும் குணத்தோரும் நேர்மை
வழாமல் இயலார் சிறு குற்றமும் கூற.

கனக சிவ வெங்கட பால கோபால ராம  சந்திர சாரங்க பூதரின் பணிபற்றி
மனதாரப் பாராட்டாதோர் மாநாட்டில் இல்லை
குறைவற்ற அவர் பணிகள் அனைத்தும் தந்த
நிறைவான அனுபவம்தான் நாம் பெற்றதிங்கே.

அன்று மதுரையில் தமிழ் வளர்த்தது புலவர் சங்கம்
இன்று திருச்சியில் நட்பை வளர்த்தது ஓட்டல் சங்கம்
தொன்று தொட்டு நாம் அறிந்தது திரிவேணி சங்கமம்
இன்று நாம் கண்டதோ நண்பர்களின் சங்கமம்!

வந்தான், கண்டான், வென்றான் என்பர் சீசர் குறித்து - இங்கே சிலர்
வந்தார், கண்டார், நின்றார் கண்கள் நிலைகுத்தி.
வந்தார், கண்டார், நட்டார், பிரிந்தார் அன்றொரு நாள்
வந்தார், கண்டார், களித்தார், பிரியார் இன்று

மன்னர் வாழ் இல்லம்போலப் பரந்த ஓட்டல் அறை
சன்னமாய்ச் செய்துவைத்த வேலைப்பாடுகள்
தின்னவும் குறைவில்லாப் பண்டங்கள் உண்டு
மின்னலாய்ச் செயல்படும் சிவாவின் தொண்டு!

பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமோவென
அறிந்து சொன்ன கம்பன் மொழி பொய்த்ததிங்கே!
பேச இங்கே பல கதைகள் இருந்தன
நேசம் நிறைந்தோரிடம் மனதாரப் பகிர்ந்து கொள்ள.

பழைய நண்பரைப் பார்த்த களிப்பால்
பேச விழைந்தன நட்பு நெஞ்சங்கள் என்றால்
உடன் வந்த துணைவியரின் நிலை? அவரும்
உடன் கொண்டார் நட்பு புதிய மாதரிடம்!

ஆண்களுக்குத்தான் அறிமுகம் தேவை பழக
பெண்களுக்குப் புதிய முகமே போதுமே பேசிப் பழக!
கட்டிய புடவை முதல் கைப்பிடித்த கணவன் வரை மனதுக்கு
எட்டிய விஷயமெல்லாம் கொட்டித் தீர்க்க வேண்டுமே மற்றவரிடம்!

எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் வேண்டும் ஓர் தொகுப்பாளர்
இந்த நம் நிகழ்ச்சிக்கோ இரு தொகுப்பாளர்
சிம்மக்குரலில் முழங்கும் செர்மானிய கோபாலும்
சன்னக்குரலில் மயக்கும் சாய்தொண்டர் தியாகுவும்!

அன்று கேட்ட பாடலை இன்று போட்டார் கோபாலர்
நின்று கேட்டார் பலர்; ஆடிக் களித்தார் சிலர்
சென்றது மனம் பின்னோக்கிப் பல ஆண்டுகள்
வென்றது உள்ளம் காலத்தின் ஓட்டத்தை!

பெண்டிரை அழைத்துப் பேசச் சொன்னார் தியாகு - உள்ளம்
விண்டு தம் கணவன்மார் செயல்கள் பற்றி
உண்டு நமக்கின்று ஒரு கண்டமென ஒடுங்கிக்
கொண்டு நின்றார் நம்மவர் உள்ளம் நடுங்க!

'என் செயல் அம்பலம் ஏறும்'  என்று இவன் தவித்திருக்க,
'உன் மானம் கப்பல் ஏறும்' என்று நண்பர்கள் காத்திருக்க
பெண்மான்களோ பாடினர் தம்மான்களின் புகழினை
'புண்படுத்தோம் எம் கணவர் மனதை' என்றதோர் உறுதியுடன்!

பெண்டிரின் பெருந்தன்மை அவர்தம் குணத்துக்கு ஏற்றம் - அவர்கள்
கொண்ட பரிசுகளோ அவர்கள் வாழ்வுக்கு ஏற்றம்
வலம்புரிச் சங்கு பெற்ற மகளிர் எல்லாம்
நலம் பெறுவர் வாழ்வில் மேலும் அச்சங்கின் சக்தியினால்.

பிற்பகல் வருமுன்னே வந்தது இடைவேளை
அற்புதமான அறுசுவை உணவு உண்ண
அறுபதைக் கடந்தோரின் ஆரோக்கியத்துக்கு உகப்ப
அறுசுவைப் பண்டங்களின் அணிவகுப்பு மரியாதை!

மாணவர் சந்திப்பு என்றாலும்
மனைவியரும் பங்கு கொண்டது சிறப்பென்றால்
அதனினும் சிறப்பு நம்
முதல்வரின் வரவும் பேச்சும்!

மாலைக் கூட்டத்துக்கு மதியமே வந்தார் முதல்வர்
காரணம் இல்லாமல் இல்லை இதற்கு
தன் மாணவச் செல்வங்களின் மனைச் செல்வங்களைக்
கண்டு பேசி அவர்கள் நெஞ்சைக் கவரத்தான்!

கல்லூரி முதல்வர் என்றால் ஓர் வகையில்
கல்வி கற்கும் மாணவர்க்கு அவர் மன்னர்தானே?
நடப்பது அவரின் ஆட்சி, நிலவுவது அவர் சட்டம் என்று
அடங்கலில் பதியா நடைமுறைதானே இயற்கை?

ஆனால் நம் முதல்வர் கதை வேறு! அன்று முதல் இன்றுவரை நம்
அனைவரையும் ஆட்சி செய்தாலும் என்றுமே
நமக்கு மன்னர் இல்லை அவர், இளவரசர்தான்
'பிரின்சி' என்றுதானே அவரை அழைக்கின்றோம்?

இளவரசர் என்பது அவர் இளமைக்குத்தான்  அடைமொழி ஏனெனில்
குன்றியதில்லை என்றும் அவர் இறைமாட்சி- தேர்தலில்
வென்ற முதல்வர் போல் ஐந்தாண்டுகள்
வீற்றிருந்து நம்மைக் கோலோச்சியவரன்றோ அவர்!

நாற்பதாண்டுகளுக்குப் பின்
போர் புரியாமலே வென்றார் மற்றும்
ஓர் சாம்ராஜ்யத்தை - நம்மை
ஆள்பவர்களின் இதய சிம்மாசனத்தை!

பரிசளித்தார் பெண்கள் அனைவர்க்கும்
அரியதோர் வெள்ளிக்காசை ஒரு
புதிய ரோஜா மலருடன் இணைத்து
அதிசயம் ஏது பெண்கள் அனைவரும் அவரை வியந்ததில்?

பரிசளிப்பு ஒருபுறம், அவர் பேச்சில் வெளிப்பட்ட அன்புப்
பரிமாற்றம் மறுபுறம் - இது போதாதென்று
வரிசையாய் அனைவர்க்கும் உணவுப்
பரிமாறல் என்ற உயர் சேவை வேறு!

நம் முதல்வர் பெயர் மணி சுந்தரம்
நாம் அனைவரும் அறிந்த மந்திரம்
கல்லூரியில் அவர் நமக்கு அளித்தது சுதந்திரம்
மனிதர்களை மயக்குவது இவர் தனித் தந்திரம்!

புதுவிதப் பாராட்டுக் கூட்டம் மாலையில்
முதல்வரும் மூன்று பேராசிரியர்களும் மேடையில்
சேவை செய்த ஆடிட்டரும் சம இருக்கையில்
செய் நன்றி மறவா மாணவர் மத்தியில்!

முதல்வரின் புகழ் பாட வந்ததங்கே இரு 'புகழ்'
'புகழேந்தி' என்றொருவர் 'கீர்த்தி' சுரேஷ் மற்றொருவர்
போதாது இருவரென்று பேச வந்தார் மேலும் இருவர்
ராஜரிஷி ராஜேஸ்வர் மற்றும் கோதண்டராமன் என்னும்
வில் வேந்தர் பெயர் கொண்ட சொல்வேந்தர்!

பேராசிரியர்கள் 'போர்' (bore) ஆசிரியர்களாக ஆவதுண்டு வகுப்பறையில்
தேரோட்டம் போல் ஊர்ந்து தாலாட்டுவதும் உண்டு
பாராட்டத்தான் வேண்டும் இங்கு பேசிய பேராசிரியர்களை
சீராக அவர் உரைத்த செய்திகளின் தொகுப்புக்காக.

முதல்வரின் ஏற்புரையில் அவர் முத்திரை பதிந்தது
மிதமான நகைச்சுவையில் நம் முகம் மலர்ந்தது
கனமான அறிவுரை காணாமல் இருந்தது
பதமான அவர் பேச்சில் நம் உள்ளம் கனிந்தது

தலை வாழை விருந்து இறுதியில்
நிறைவான நாளொன்றின் முடிவினில்
குலைவாழைபோல் தலை குனிந்து புசித்தோம் நாம்
கலையாத நினைவுகளின் களிப்பினில்

முதல்நாள் சங்கமம் சங்கம் ஓட்டலில்
மறுநாள் பயணம் கல்லூரி நோக்கி
அன்று நாம் அறியாக் கல்லூரிப் பேருந்துகள்
இன்று வந்தன நம்மைச் சுமந்து செல்ல!

பயணப்பாதையில் புதிய பல காட்சிகள்
காலத்தின் போக்கில் கணக்கற்ற மாற்றங்கள்
புதிய சாலைகள் புதிய கட்டடங்கள் புறத்தே புலப்பட நம்
மனதில் மட்டும் பழைய நினைவுகளின் ஓட்டம்

முன்னாள் மாணவரை முன்னின்று வரவேற்ற
இந்நாள் இயக்குநர் இனிய பண்பாளர்
அழகரசர்* என்ற அவர் பெயர்க்கேற்ப
மலர் முகம் காட்டி இனிய சொல் பேசியவர்.

கல்லூரி வளாகத்துக்குள் வட்டமடித்த பேருந்து
வகுப்பறைகள், விடுதிகள் என்று வலம் வந்தது
தங்கிப் படித்த(!) விடுதிகளைத்
தம் தம் துணைவிக்குக் காட்டிய பெருமை நமக்கு

வகுப்பறை எதுவென்று அவர் வினவினாலோ
வகுத்துச் சொல்ல விடையில்லை நம்மிடம்
எப்போதோ ஓரிரு முறை போன உணர்வு
இப்போது எப்படி இருக்கும் நினைவு?

விட்டது படிப்பு என்று விடுதலை பெற்றோடியபோதும்
விட்டு அகலுமோ விடுதி வாழ்வின் நினைவுகள்?
பழைய அறைகளைப் பார்வையிட்டதும்
கண்ணீரும் வந்தது கரை கடந்த களிப்புடன்.
இனியும் வருமோ அந்த நாட்கள்?
இதயம் விடும் ஏக்கப் பெருமூச்சுக்கள்!

மெகா சந்திப்பின் இறுதியில் ஓர் இன்சுவை விருந்து
மெகா மெஸ் என்னும் பெயர் பொருந்திய கூடத்தில்
இன்று உணவை வாய் ருசித்து உண்டபோதே
அன்று உண்ட அனுபவங்களை அசை போடும் அடிமனம்!

நன்றி கூறுவேன் நம் நண்பர் அனைவர்க்கும்
நயம்பட நானும் வாலியின் வரிகளைக் கடன் பெற்று
'நான் நன்றி சொல்வேன் என் கண்களுக்கு
உன்னை என்னருகே கொண்டு வந்ததற்கு.'

அழகரசர்* - சுந்தரராஜன்A Passionate Event at Trichy
Trichy has hosted many a political meet
But never a passionate meet like this.
The 40th anniversary celebrated by the 60’s
The confluence of 80 men for a festive meet.

We studied in a college of this city in the distant past
But always do we carry the memory of our classmates in our hearts
That’s what made many of us make it for the meet
Travelling far and wide using different modes of transport.

Margazhi* is known for its surfeit of festivals
Like the music concerts with a world wide appeal
And the Srirangam temple rituals of 10-days and 10-nights
But who would know of our festival of passion?

We met as individuals in the past and parted after some time
We then went in pursuit of jobs, marriage, money and what not.
We met again for a replay of the past
At the onset of winter in December.

Fantastic arrangements by our Trichy friends
Words I can’t find to convey the feelings of my mind
Even a punctilious person can fault not find
Unless he is a person of unsound mind!

Every participant was amazed
Excellent work of the Trichy heroes
Our experiencing this great event was
But the result of the relentless work of the team.

History mentions a Sangam in Madurai
That worked for promoting Tamil literature
Hotel Sangam at Trichy deepened our friendship
Like the traditional Triveni Sangamam,
We had our Sangamam at Trichy.

Came, saw, conquered - That was Caesar’s story
Came, saw and stood transfixed – This was this day’s cover story
Came, saw. befriended and parted – This happened in the past
Came, saw, felt elated and won’t part again – This happened today.

The spacious hotel had a palatial atmosphere
The thoughtful embellishments added the flavor
A lot of snacks to cherish and relax
A liberal bounty from the benevolent Siva.

Words have no role when the parted meet again, asserts Kamban@
Belied were his words when people meeting after a long gap
Started talking as if having nothing else to do
Driven by the urge to share things with friends.

We got engaged in never ending conversations
Meeting our old friends after a gap all right
But what could our better halves do right?
They built instant friendships so swift!

Men would wait for formal introductions to converse
Women need no such protocols to socialize
After all they have so much to share
From the design of their saris to talking points about their spouses!

Any event needs a compere
Ours had two that were beyond compare
The stentorian Herr IG
And the soft-toned Sairam Thyagu.

IG played songs that were
Popular in our common rooms of yore
Some listened in trance and some danced in ecstasy
As we went down in our memory lanes
Time took a pause from its pace.

And Thyagu for his part
Asked the ladies to speak out
Their minds about their husbands
Thus planting mines to explode.

Shocked as all we were
Fearing the facts to come out stark
With our bitter halves allowed to talk
Awaited the spectre of flying sparks

While the victims awaited the impose
And the friends a good expose
The ladies displayed a noble pose
Sparing for once their own spouse(s)!

The ladies had a reward unintended
For their choosing to be broadminded
A Dhakshinvarti Shank they got 
As a special gift for making it to the meet

It was time for the lunch break
What an assortment of delicacies to take!
Care was taken of the oldies’ age
In choosing the menu to our advantage

Great it was to have
The presence of spouses in our meet.
Greater it was to have our
Princie also to participate.

Princie made it to the meeting hall
Long before the function’s call
Reason he had for his early call
To charm the ladies first of all!

Head of a college is a king in a way
Having everything in his way
Holding the students in sway
Is this not the prevalent way?

But our Princie was no King that way
Though ruling us he has been till this day
He is the Prince for us
The way we call him that is.

Prince he is only for his youth
Since he is an emperor otherwise
Never was his authority in dispute
During the half decade of our student days.

The emperor conquered yet another territory
After a gap of years counting forty
The crown he won this time
Was the hearts of the queens of our homes!

He presented the ladies with a precious gift
Of a silver coin enshrined with the Goddess of wealth
Embellishing it with a fresh flower of Rose
No wonder he won over their hearts!

Felicitation program in the evening
Princie and three other professors on stage adorning
With our Trust Auditor also joining
The stage presented quite a gathering.

Who were more apt to pay tributes to the Princie
Than the duo that had ‘fame’ in their names, no fancy
Referring I am to Pugazhendhi, the name meaning ‘the holder of fame’
And Keerthi Suresh, his first name meaning ‘of repute’

The ‘famous’ two made their presentation too good, yet
There was a third man to cast his spell too
And it was Kothandaraman, ‘the master of archery’ in name
And a ‘master of oratory’ indeed!

And of course Rajeswar, the professor
As he was referred to by Gopal Iyer
Dwelt on the freedom we got without fighting for
So it was a foursome tribute, not fulsome a bit.
  
Professors tend to bore students in their classes
Putting them to sleep while taking them through tortuous passes
But the trio that spoke this day
Gave us something useful in their say.

The Princie had his stamp in his speech
Sparkling with his ready wit as his wont
Averting pious platitudes for good
And charmed us all with his human touch.

Ended the day with a sumptuous meal
Served in tradition on a plantain leaf
As we partook the meal to our hearts’ content
We found our hearts lined with emotional tint.

First day of the meet at Hotel Sangam
Second day was journey to the college
College buses not seen those days
Came to ply us to our abode of yesterdays.

Several changes en route we observed
New buildings and roads that were built
Unmindful were we of these since
Our minds were living in the distant past.

Welcome to the old students was grand
By the present Director and his band
Sundararajan is his name and a
Wonderful person he was to us.

Around the campus the buses plied
Showing us the buildings old and new.
Proud were we in showing to our halves
The hostels that we stayed in our youth.

If they would ask about the classrooms
May be we couldn’t show them today
Visited them only rarely those days
How can we remember them past many days?

Felt relived sure once our studies got over
But about the hostels there’s a hang over
How can we forget those good old days
Of staying together with strangers turned friends?

When we stepped into our old hostel rooms
Tears flowed from eyes both down
‘Can we get back into the past?’
Crave our hearts in earnest quest.

Ended the Mega Meet with a lunch magnificent
In the Mega Mess, the name coincident
As our tongues relished the food
Our hearts chewed the memory cud.

It’s time to thank all my friends
Limited as I am with words that befit
Borrow I would from Vaali, the Tamil film lyricist
‘I thank my eyes for bringing you (all) close to me.’
  
Margazhi* - The ninth month in the Tamil calendar (Dhanur masaa).

Kamban@ - The Tamil poet, the author of  ‘Raama Kaathai,’ popularly known as ‘Kamba Ramayanam.’No comments:

Post a Comment