Sunday, November 1, 2026

81. தமிழன் அறிவு – அன்றும் இன்றும்

(புதுச்சேரி படைப்பாளர் இயக்கம் நடத்திய பாப்போட்டியில் மூன்றாம் நீலைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது)

வளரும் விரைவாய் எல்லை தொடும் வரை
படரும் கொடி போல் படர்ந்து பல்கிப் பெருகி
அமரும் வளர்ச்சி நின்று எல்லை தொட்டபின்
மனிதன் அறிவின் இயல்பிது அறிவோம் நாம்.

தமிழன் அறிவோ வளரும் வரையறையின்றி
கனிம வளம் பல்கா நம் நற்றமிழ் நாட்டிலும்
கனமான இரும்பை வார்த்தது அவன் கூரறிவு
இனி வேறு சான்று வேண்டுமோ இவ்வுலகுக்கு?  

அன்று போல் இன்றும் வளர்கிறான் தமிழன்
அண்டம் முழுதும் தடம் பதித்து அறிவால்
அணியாய்த் திகழ்கிறான் அறிவுலகுக்காங்கே
மணியான சாதனைகள் மிகவே புரிந்து தினம்.

எப்பொருளையும் என்னென்று ஆய்ந்து பார்த்து
மெய்ப்பொருள் அறியும் இயல்பினன் தமிழன்
எப்போதும் உடனிருக்கும் இவ்வியல்பு என்றும்
தப்பாமல் இயக்கும் அவனறிவைச் சரியாய்.