Tuesday, June 9, 2026

49. Global Warming!

ஆறு பருவங்களாய்
ஆண்டைப் பிரித்தார் ஆன்றோர்,
இளவேனில், முதுவேனில்,
கார், கூதிர், முன்பனி, பின்பனி என.


அண்டை நாடுகளை ஆக்கிரமிக்கும்
ஆதிக்கப் பேரரசன் போல்,
மற்ற பருவங்களின்  பெரும்பகுதியைத்
தனதாக்கிக் கொண்டு,
ஆதிக்கம் செலுத்துகிறது, 
முதுவேனில் எனும் கொடிய கோடை! 




48. எனக்காக!

 எங்கோ பிறந்து
கன்றீந்து பாலுவக்கும்
தன்னலம் கருதாப்
பசுக்களும்,

உறக்கம் துறந்து
லாரிகளில் பால் சுமந்து
விரதம் காக்கும்
ஓட்டுனர்களும்
,

இரவு பகல் மாறி வந்து
இயந்திரங்களை இயக்கி,
பால்தனைப் பதப்படுத்தி,
பைகளில் திணித்தணிப்பும்
திறம் பெற்ற தொழிலாளரும்
,

பின்தூங்கி முன்னெழுந்து
முன்காலைக் குளிர் பொறுத்து
லாரி வரும் வரை
  காத்திருந்து
பாக்கெட்களைச் சுமந்து வரும்
ஊழியரும்

இணைந்து வழங்குகிறார்கள்,
என் காலைக் காப்பியை!