ஐயமிட்டு உண் என்ற அவ்வையே
ஏற்பது இகழ்ச்சி என்றார்
பிச்சை எடுத்தேனும் கல்வி பெறு
என்று போதித்தவரும் அவரே.
பொறுமையின் பெருமை கூறும்
ஒரு பழமொழி
விரைந்து செயல்படத் தூண்டும்
வேறோரு பொன்மொழி.
நேர்மையின் பெருமை பேசும்
ஒரு கதை
தந்திரச் செயலை வியந்து பேசும்
வேறொரு கதை.
உழைப்பின் உயர்வை உரக்கக் கூறும்
ஒரு நூல்
குறுக்கு வழியில் வென்றவர் புகழ் பாடும்
மற்றொன்று
முரண்பட்ட கருத்துகளில் எதைக் கொள்வது
என மயங்கி
எதுவும் செய்யாமல் இடம் விட்டு அகலாமல்
குழம்பி நின்றேன்.
இரண்டில் எதுவென்று குழம்பாமல்
இரண்டில் ஒன்றைத் தேர்ந்து முயன்றால்
எப்படியும் கிடைக்கும் வெற்றி என்றார்
இவை எதையுமே படிக்காத வெற்றியாளர்.

No comments:
Post a Comment