வானிலை நிலையத்தின் கணிப்புகளில் ஊசலாட்டம்
இணையதள 'வலைஞர்'களின்* ஆர்ப்பாட்ட அடித்தாட்டம்!
மையம் கொண்ட புயலின் வழக்கமான வடக்கோட்டம்
காத்திருந்த பயிர்கள் நீரின்றி அடைந்த உடல் வாட்டம்
மழையை எதிர்பார்த்திருந்த உழவர்களின் மனவாட்டம்
வர வேண்டும் நல்மழை வானிலிருந்து இனியாட்டம்**
*வலைஞர் - வலைப்பக்கங்களில் எழுதுபவர் (பிளாகர்)
**இனியாட்டம் - இனியாவது என்பதன் ஒரு வழக்குச் சொல்

No comments:
Post a Comment