Wednesday, March 4, 2026

43. மூத்தோர் சொல் கேள் - 1

 மூத்தோர் சொல் கேள்!


என் தந்தை சொல் எனக்கு வேம்பு

என் மகன் என் சொல்லை ஏற்காவிடில்,

அது அவன் வீம்பு!

 

கடந்த பல தலைமுறைகள் கண்டறிந்த

விஞ்ஞான உண்மைகளின் மேல்

அடுக்கடுக்காய்க் கட்டியதால் நாம் பெற்றவை

கணினி, இணையம், செயற்கை நுண்ணறிவு.

 

தந்தையின் செல்வத்தைத் தனதாக்கிக் கொண்டு

அதை மேலும் பெருக்குவதுதான் அறிவு.


மூத்தோர் சொல் எனும் செல்வத்தை சுவீகரித்து

அதில் நம் அனுபவ அறிவைச் சேர்த்து

அதை மெருகூட்டுவதே பகுத்தறிவு!

No comments:

Post a Comment